Saturday 27th of April 2024 04:47:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி!

ஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி!


ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி பத்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் தோல்விகண்டிருந்தாலும் முதல் பத்து ஓவர் முழுவதுமே ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அபாரமாக ஆடி துடுப்டிடுத்தாடினர் தொடக்க நிலை ஆட்டக்காரர்களான படிக்கல் - பின்ச் ஆகியோர்.

ஹைதராபாத் அணித்தலைவர் வோர்னர் தனது பந்துவீச்சாளர்கள் அனைவரையும் சுழற்சி முறையில் மாற்றி பெங்களூரின் துடுப்பாட்டத்தை உடைக்க முயன்றார். இருப்பினும் அவருடைய முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

பத்து ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி பெங்களூர் அணி 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அரை சதம் கடந்திருந்த படிக்கல் விஜய் ஷங்கர் வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தில் 56 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பின்ச்சும் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் கோலியும், டிவில்லியர்ஸும் களம் இறங்கினர்.

14 ரன்கள் எடுத்திருந்த போது, தமிழக வீரர் நடராஜனின் வேகத்தில் கோலி வீழ்ந்தார்.

கோலி ஆட்டமிழந்த பின்னர் பெங்களூரு அணியை இறுதி வரை கொண்டு சென்றார் டிவில்லியர்ஸ்.

இருப்பினும் அந்த முயற்சியில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சியினால் வென்று காட்டினர். பவர்பிளே முடிவில் 53 ரன்களை குவித்திருந்த பெங்களூர், அதற்கடுத்த 14 ஓவர்களில் வெறும் 110 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது.

164 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது ஹைதராபாத். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடி வீரர்கள் வார்னரும், பேர்ஸ்டோவும் இறங்கினர். ஆறு ஓட்டங்களில் ஆட்டத்தின் பத்தாவது பந்திலேயே வார்னர் வெளியேறினார்.

மணீஷ் பாண்டே, பேர்ஸ்டோவுடன் இணைந்து 71 ஓட்டங்களுக்கு இணைப்பாட்டம் அமைத்தனர். அவர்களது இணைப்பாட்டத்தை உடைக்க கோலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

மணீஷ் பாண்டேவை 12வது ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்தியிருந்தார் சஹால்.

பேர்ஸ்டோ சஹாலின் சூழலில் சிக்கினார். அடித்த பந்திலேயே விஜய் ஷங்கரும் ஆட்டமிழக்க அதற்கடுத்த துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேற வெறும் 153 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது. அதன் மூலம் பெங்களூர் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE